என் மலர்

  தமிழ்நாடு

  ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்- புதுச்சேரி முதலமைச்சர் பேட்டி
  X

  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

  ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்- புதுச்சேரி முதலமைச்சர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.
  • ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

  தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் இருந்து வெளியே வந்த அவர் கோவில் பணியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார்.

  பின்னர் அவர் கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். ஆளுநரின் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

  எனக்கு வேறு சில நிகழ்ச்சிகளுக்காக வெளியே செல்ல வேண்டியதிருக்கும். இதனை வைத்து ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×