search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.
    • மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம்-திருநின்றவூர், திருவள்ளூர்-செங்குன்றம் ஆகிய ஊர்களுக்கு செல்லலாம். இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நான்கு சாலைகள் சந்திக்கும் கூட்டுச்சாலையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள்.

    இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் மிகப்பெரிய லாரிகள் வந்து செல்ல இந்த நான்கு வழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைப்பதாக கூறி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    அப்பொழுது திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் சாலையில் ஒன்றிய குழு உறுப்பினரின் 2013-2014-ம் ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றினர்.

    சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் மீண்டும் அது அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடையை சாலை ஓரம் குப்பை தொட்டியில் போட்டு வைத்துள்ளனர். இதனால் மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றத்தால் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை போர்க்கால அடிப்படையில் அங்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×