search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொத்தேரி ரெயில் நிலையம்: ரெயில் பெட்டி உணவகம் 24 மணி நேரமும் இயங்கும்
    X

    பொத்தேரி ரெயில் நிலையம்: ரெயில் பெட்டி உணவகம் 24 மணி நேரமும் இயங்கும்

    • உணவகத்தில் இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை ருசிக்கலாம்.
    • உணவகத்தின் பெயர் 'என்.எச் 32' ஆகும்.

    சென்னை:

    சென்னை பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் சென்னையை நோக்கி வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் இந்த உணவகத்தில் இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை ருசிக்கலாம். பொத்தேரி ரெயில் நிலையத்திற்கு வெளியே அழகிய முறையில் ரெயில் பெட்டி போல இந்த உணவகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த உணவகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும். ஜி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டி உணவகம் , பொத்தேரியில் வசிப்பவர்களையும், ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகளையும் வெகுவாக கவரும். இந்த உணவகத்தின் பெயர் 'என்.எச் 32' ஆகும்.

    ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரெயில்வே அமைத்துள்ளது. 2,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரெயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள 2-வது ரெயில் பெட்டி உணவகம் ஆகும். இந்த உணவகத்தில் பயணிகள் அமர்ந்து சாப்பிட மர பெஞ்சுகள் மற்றும் கிரானைட் டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சோபாக்களும் போடப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டி உணவகம் வாடிக்கையாளருக்கு அசல் ரெயில் பெட்டியின் உணர்வை வழங்குகிறது. இதற்காக இந்த ரெயில் பெட்டி உணவகம் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

    இந்த உணவகத்தில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டாங்கொளத்தூரில் மேலும் ஒரு ரெயில் உணவகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×