என் மலர்

  தமிழ்நாடு

  பெருந்துறை அருகே தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
  X

  பெருந்துறை அருகே தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மிதுன் நித்தின் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார்.
  • வீட்டிற்கு வந்த தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் தங்க மாதேஸ்வரன். இவரது மூத்த மகன் மிதுன் நித்தின் (வயது 17). இவர் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இவர் சரியாக படிக்காமல் கபடி விளையாட போய்விடுவார். இதனை அவரது தந்தையும், தாயும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மிதுன் நித்தின் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் மாட்டும் கொக்கியில் வேஷ்டியால் தூக்குபோட்டு கொண்டார்.

  பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தந்தை மகன் தூக்குபோட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×