search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகர்-சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட மது பார்களுக்கு சீல்
    X

    விருதுநகர்-சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட மது பார்களுக்கு 'சீல்'

    • விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.
    • அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.

    விருதுநகர்:

    விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது. இது தொடர்பாக சோதனை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, விருதுநகா் வட்டாரத்தில் 18, சிவகாசி பகுதியில் 25, அருப்புக்கோட்டை பகுதியில் 11, ராஜபாளையம் பகுதியில் 25, சாத்தூா் பகுதியில் 8, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 20, திருச்சுழி பகுதியில் 14 என மொத்தம் 121 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டறிந்து சீல் வைத்தனா்.

    இதேபோல் சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பார்கள் செயல்படுவதாக சாத்தூா் வருவாய்த் துறையினருக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தூா், இருக்கன்குடி, நென்மேனி, படந்தால், ஓவைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களின் உரிமங்களை போலீசாா் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.

    வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், மதுவிலக்கு போலீசாா் ஆய்வு நடத்தினா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு அவா்கள் சீல் வைத்தனா்.

    மேலும் பல்வேறு பார்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    Next Story
    ×