என் மலர்

  தமிழ்நாடு

  தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி- விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ்
  X

  தண்டவாளத்தில் சிக்கி நின்ற சரக்கு லாரி

  தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி- விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழுதாகி நின்ற லாரியின் அருகே ரெயில் வந்தபோது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
  • தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களின் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது.

  கவுண்டம்பாளையம்:

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-சென்னை இடையே தினந்தோறும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

  வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து, சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

  ரெயில் புறப்பட்ட தகவல் கிடைத்ததும் துடியலூர் ரெயில்வே கேட்டை மூட கேட் கீப்பர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக டாஸ்மாக் மதுபானம் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. லாரி டிரைவர் கேட் மூடுவதற்கு மறுபகுதிக்கு சென்று விடலாம் என லாரியை வேகமாக இயக்கினார்.

  ஆனால் லாரி அங்கிருந்த மேடான பகுதியை கடக்க முடியாமல், திணறியதுடன், லாரியின் அச்சும் முறிந்துவிட்டது. இதனால் லாரி தண்டவாளத்தின் நடுவே சிக்கி கொண்டது.

  இதை பார்த்த கேட் கீப்பர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் கீப்பருக்கு தகவல் கொடுத்தார். அவர் ரெயில் என்ஜின் டிரைவருக்கு சம்பவம் குறித்து எடுத்து கூறி, சிவப்பு விளக்கை காட்டினார். இதனால் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

  இருந்தாலும் ரெயில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. பழுதாகி நின்ற லாரியின் அருகே ரெயில் வந்தபோது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 100 அடி தூரத்தில் ரெயில் நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

  திடீரென ரெயில் நின்றதால் பயணிகள் இறங்கி வந்து பார்த்தனர். அப்போது தண்டவாளத்தின் நடுவே லாரி நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

  பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ள முயன்றனர். ஆனால் லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து கயிறு கட்டி இழுக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பெல்ட் மூலம் கட்டி இழுத்தனர். ஆனால் லாரி நகராமல் பெல்ட் கட் ஆனாது.

  இதைத்தொடந்து இரும்பு சங்கிலி மற்றும் இரும்பு ரோப் மூலம் கட்டி கிரேன் மூலம் இழுத்தனர். இருந்தபோதும் லாரியை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியின் பின்னால் இருந்து தள்ளி விட முன்னால் கிரேன் மூலம் தண்டவாளத்தில் இருந்து லாரியை நகர்த்தினர்.

  பின்னர் ரெயில்வே கேட் மூடப்பட்டு அங்கு காத்திருந்த நீலகிரி விரைவு ரெயில் 1 மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இந்த லாரி சிக்குவதற்கு சிறிது நேரம் முன்பு இதே போல் ஒரு லாரியின் ஆக்சில் உடைந்தது. அதேபோல் லாரியை நகர்த்திய பின் அவ்வழியாக வந்த அரசு விரைவு சொகுசு பேருந்தும் தண்டவாளத்தில் சிக்கி முன்பக்க படிக்கட்டு உடைந்தது குறிப்பிடத்தக்கது.

  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கோவை-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களின் உயரத்தைவிட 1 அடி வரை உயரமாக உள்ளது.

  இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

  எனவே உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×