என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'தோழி விடுதிகள்' வரலாற்று பக்கங்களில் நிலைகொள்ளும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
- தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி!
- மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறிஇருப்பதாவது:-
தோழி விடுதிகள்-இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி! மகளிர்க்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இது!
டாக்டர் நடேசனாரின் 'திராவிடர் இல்லம்' போல், நமது திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Next Story






