என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாயமான கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?
- சசிகாஞ்சனா நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.
- மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசையா. இவரது மகள் சசி காஞ்சனா (வயது19). கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி.
இந்நிலையில் சசிகாஞ்சனா நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கரலிங்கபுரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சசி காஞ்சனா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதனால் அவரது பெற்றோர் மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி மனமுடைந்து காணப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
எனவே அதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






