என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது

    • பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து ஜூலை மாதம் 28-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும், அதனை தொடர்ந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இந்த ஆண்டில் அணை 2-முறை நிரம்பினாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.79 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1537 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 64.56 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×