search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு- அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு- அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின

    • நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
    • முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீடு கொண்ட சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6226 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1767 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 25-ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. ஆன்லைன் வழியாக நடந்த இக்கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

    அரசின் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதலில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து லாக் செய்தனர். நீட் மார்க் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நேற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து ஒதுக்கீட்டு கடிதத்தை பதிவிறக்கம் செய்து அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு 11-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 80 முதல் 90 சதவீத இடங்கள் நிரம்பி விட்டதாக மருத்துவ சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்து செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன. அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லூரிகளில் பி.டி.எஸ். இடங்கள் கொஞ்சம் காலியாக உள்ளன.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. 11-ந் தேதி மாலைவரை கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு தான் எத்தனை பேர் கல்லூரிகளில் சேரவில்லை என முழுமையாக தெரியவரும்.

    அதில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இது போல் ஏற்படும் காலி இடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் மொத்தம் 4 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

    இந்த மாதம் இறுதிக்குள் பெரும்பாலான மருத்துவ இடங்கள் நிரம்பி விடும். செப்டம்பர் 1-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×