என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி நடைபெற இருந்த மக்களை தேடி மேயர் முகாம் தள்ளிவைப்பு
- மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) நடைபெற இருந்த "மக்களைத் தேடி மேயர்" திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






