search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாசிவராத்திரி- திருவண்ணாமலை, காளகஸ்திக்கு 18-ந்தேதி சிறப்பு பஸ்கள்
    X

    மகாசிவராத்திரி- திருவண்ணாமலை, காளகஸ்திக்கு 18-ந்தேதி சிறப்பு பஸ்கள்

    • மகாசிவராத்திரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள காளகஸ்தி மொகிலி ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • சிவராத்திரியையொட்டி ஆந்திரா மாநிலத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    மகாசிவராத்திரி 18-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் இந்துக்கள் தங்கள் குல தெய்வத்தை வழிபடும் சிறப்பு தினமாக கருதி அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் அன்று மக்கள் கூடி இரவு முழுவதும் வழிபாடு செய்வார்கள்.

    மகாசிவராத்திரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள காளகஸ்தி மொகிலி ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதனால் சனிக்கிழமை காலையில் இருந்து கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்லக்கூடும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை மாதவரம் பஸ் முனையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 50 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவராத்திரியையொட்டி ஆந்திரா மாநிலத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவையை கருதி பஸ் வசதி அதிகரிக்கப்படும். இதேபோல கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

    Next Story
    ×