என் மலர்

  தமிழ்நாடு

  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
  X

  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 29-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
  • 30, 31-ந்தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

  சென்னை:

  பூமத்திய ரேகையையொட்டி இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.

  அதன்பிறகு தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ந்தேதி அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும். இதன் காரணமாக 29-ந்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

  30, 31-ந்தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

  Next Story
  ×