search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரூர் பரமத்தி, ஈரோடு, வேலூரில் இன்று 110° டிகிரி வெயில் சுட்டெரித்தது
    X

    கரூர் பரமத்தி, ஈரோடு, வேலூரில் இன்று 110° டிகிரி வெயில் சுட்டெரித்தது

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது

    தமிழகம் முழுவதும் இன்று 16 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    ஈரோடு 110, வேலூர் 110, திருச்சி 108, திருப்பத்தூர் 107, திருத்தணி 107, தருமபுரி 106, மதுரை 106, வால்பாறை 85, குன்னூர் 79, ஊட்டி 79, கொடைக்கானல் 76, டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    Next Story
    ×