என் மலர்

  தமிழ்நாடு

  ஸ்ரீமதியின் மரணம் கொலை அல்ல... பாலியல் வன்கொடுமைக்கும் ஆதாரம் இல்லை: சென்னை ஐகோர்ட் கருத்து
  X

  ஸ்ரீமதியின் மரணம் கொலை அல்ல... பாலியல் வன்கொடுமைக்கும் ஆதாரம் இல்லை: சென்னை ஐகோர்ட் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
  • இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

  சென்னை:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஒரு மாத காலமாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செயதுள்ளது.

  மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

  அந்த தீர்ப்பில், மாணவி ஸ்ரீமதியின் மரணம், கொலை என்பதற்கான ஆதாரம் இல்லை எனவும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.

  இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் குழு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிமன்றம் கூறியிருப்பதாவது:

  பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின்படி, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது.

  மாணவியின் கடிதம் மற்றும் சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், பாடம் படிப்பதில் மாணவிக்கு சிரமம் இருந்தது உறுதியாகி உள்ளது. தற்கொலைக்கு துண்டிய பிரிவில் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது தவறு. இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை.

  மாணவி மாடியில் இருந்து விழும்போது மரத்தில் அடிப்பட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல, அது வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.

  இவ்வாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

  உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, வழக்கில் திருப்பதை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×