என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராசிபுரம் அருகே பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
    X

    ராசிபுரம் அருகே பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஆலையில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

      ராசிபுரம்:

      ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் திம்பநாயக்கன்பட்டியில் கோலியாஸ் கிழங்கு அரைக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

      இங்கு மருத்துவ குணம் கொண்ட கோலியாஸ் கிழங்குகள் சேகரிக்கப்பட்டு அதை பவுடர் ஆக்கி பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

      இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் தொடர்பு உள்ள பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெரியசாமிக்கு சொந்தமான தொழிற்சாலையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

      சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஆலையின் பல்வேறு பகுதிகளில் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் தொழிற்சாலையில் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

      Next Story
      ×