search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி தென்னூரில்  நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
    X

    திருச்சி தென்னூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

    • 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்
    • அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    திருச்சி:

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கும் எ.வ.வேலு வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடையவர்கள் அலுவலகங்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அவருடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும் திருச்சி தென்னூர் அண்ணா நகர் கண்ணதாசன் சாலை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கு மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நிதி நிறுவன அதிபரான சாமிநாதன் காப்பி தூள் ஏஜென்சியாகவும் உள்ளார். சோதனைக்கு பின்னர் சாமிநாதன் குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து சென்றனர் சென்றனர்.

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மணப்பாறை சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    ஏற்கனவே கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் திருச்சியிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×