search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடல்நிலை சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை
    X

    உடல்நிலை சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி தற்கொலை

    • இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பரமசிவம் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (62). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    இவர்களது மகள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விட்டார். 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பரமசிவம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். பஞ்சவர்ணத்திற்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவரது இருவிரல்கள் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 விரல்களையும் நீக்கி விட்டனர். இதனால் வலியால் தவித்து வந்துள்ளார்.

    பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையே என பரமசிவம்-பஞ்சவர்ணம் தம்பதியினர் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கணவன், மனைவி இருவரும் விட்டத்தில் பஞ்சவர்ணத்தின் சேலையால் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு வந்தவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டு இருவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடல்நிலை சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×