என் மலர்
தமிழ்நாடு

X
திமுக எம்.பி. மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
By
மாலை மலர்17 Nov 2022 5:47 PM IST

- 1995ம் ஆண்டு குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தை ஜெகத்ரட்சகன் வாங்கினார்
- வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை:
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995ம் ஆண்டு ஜெகத்ரட்சகன் குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X