search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காயல்பட்டினத்தில் கொடூர மழை- தூத்துக்குடி முழுவதும் சராசரியாக 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது
    X

    காயல்பட்டினத்தில் கொடூர மழை- தூத்துக்குடி முழுவதும் சராசரியாக 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

    • தென் மாவட்டங்களில் 39 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
    • ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரையில் இல்லாத அளவிற்கு 95 செ.மீ. மழை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் பெய்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் வரலாற்று பதிவாக இது அமைந்துள்ளது. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென் மாவட்டங்களில் 39 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதாவது 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்திற்கு அடுத்ததாக திருச்செந்தூரில் 69 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா ஆபிஸ் 62 செ.மீ., மாஞ்சோலை 55 செ.மீ., கோவில்பட்டி 53 செ.மீ., குண்டநீர் அணை 51 செ.மீ., ஒத்து 50 செ.மீ., மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

    நாலுமுக்கு (நெல்லை) 47 செ.மீ., பாளையங்கோட்டை 44 செ.மீ., அம்பாசமுத்திரம் 43 செ.மீ., மணியாச்சி 42 செ.மீ., சேரன்மாதேவி, கன்னடையான் அணைக்கட்டு 41 செ.மீ., ஒட்டப்பிடாரம், கடம்பூர் தலா 37 செ.மீ.

    காக்காச்சி, நம்பியார் அணை தலா 36 செ.மீ., பாபநாசம் 35 செ.மீ., நாங்குனேரி, குலசேகரப்பட்டினம், மணிமுத்தாறு தலா 33 செ.மீ., களக்காடு 32 செ.மீ., திருநெல்வேலி 31 செ.மீ., கொடுமுடியாறு அணை, செங்கோட்டை, மயிலாடி வேதநந்தம் தலா 30 செ.மீ., ராதாபுரம், சேர்வலார் அணை, கயத்தாறு தலா 27 செ.மீ., விளாத்திக்குளம் 26 செ.மீ., கடனா அணை, வைப்பார் தலா 22, ஆயிக்குடி, ராமநதி அணை தலா 21, சாத்தூர் 20 செ.மீ., மழை பெய்துள்ளது.

    இதுதவிர கழுகு மலை, நாகர்கோவில், கோட்டாரம், வெம்பகோட்டை, கன்னியாகுமரி, எட்டயபுரம், சிவகாசி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவிலன்குளம், தென்காசி தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 60 செ.மீ., மழை பெய்துள்ளது.

    Next Story
    ×