என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனமழை எதிரொலி: புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    கனமழை எதிரொலி: புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது.
    • தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பருவமழை தீவிரமாக இருந்தாலும், கடந்த மாதம் (அக்டோபர்) குறைவாக மழை பதிவானதால் இயல்பைவிட மழை குறைவாகவே உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது.

    இதனைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதேபோல், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை (24-11-2023) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    இதனையடுத்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று (23-11-2023) புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×