என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண்களுக்கு பாலியல் தொல்லை- தலைமறைவான பாதிரியாரை செல்போன் சிக்னல் மூலம் தேடும் போலீசார்
    X

    பெண்களுக்கு பாலியல் தொல்லை- தலைமறைவான பாதிரியாரை 'செல்போன் சிக்னல்' மூலம் தேடும் போலீசார்

    • தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீடியோ மட்டுமின்றி பெண்களுடன் புகைப்படம், ஆபாச சாட்டிங் என பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செக்ஸ் புகாரில் சிக்கிய பெனடிக்ட் ஆன்றோ மீது, அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் அவர் தலைமறைவாகி விட்டார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர் கேரளா அல்லது பெங்களுரூவில் பதுங்கி இருக்கலாம் என தெரிகிறது.

    இதனை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு ரகசியமாக சென்று கண்காணித்து வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் அவரால் பாதிக்கப்பட்டோர், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கலாம் என்றும் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×