என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாலம் கல்யாணசுந்தரத்துக்கு ஜி.கே.மூப்பனார் விருது: ஜி.கே.வாசன் நாளை வழங்குகிறார்
    X

    பாலம் கல்யாணசுந்தரத்துக்கு ஜி.கே.மூப்பனார் விருது: ஜி.கே.வாசன் நாளை வழங்குகிறார்

    • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு “ஜி.கே.மூப்பனார் விருது” வழங்கி பேசுகிறார்.
    • சேவைக்கான விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கும், அரசியலுக்கான விருது முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் (எ) வேணுகோபாலுக்கும் ஜி.கே.வாசன் வழங்குகிறார்.

    சென்னை:

    த.மா.கா. இலக்கிய அணி சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 92-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கம் "சென்னை நிருபர்கள் சங்கத்தில்" நடைபெறுகிறது.

    இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு "ஜி.கே.மூப்பனார் விருது" வழங்கி பேசுகிறார்.

    விழாவில் கருத்தரங்கமும், சேவைக்கான விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கும், அரசியலுக்கான விருது முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் (எ) வேணுகோபாலுக்கும் ஜி.கே.வாசன் வழங்குகிறார்.

    மேலும் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை தி.நகர் ஜி.என். செட்டி ரோடு, சர்.பிட்டி தியாகராய அரங்கத்தில் தவில் சக்கரவர்த்தி அரித்துவாரமங்கலம் பத்மஸ்ரீ எ.கே.பழனிவேல் பற்றி முனைவர் கோ.சிவ வடிவேல் எழுதிய "ஏ.கே.பி. தவில் இசைப் பயணம்" என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    Next Story
    ×