search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த கும்பல்... பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் கண்ணீர்
    X

    கைதான மோசடி கும்பல்

    அழகான பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த கும்பல்... பெண் ஆசையில் பணம் இழந்தவர்கள் கண்ணீர்

    • கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான்.
    • மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 43 வயதான நபர், ஆயுர்வேத மசாஜ் பெற விரும்பினார். இதற்காக இவர் ஆன்லைனில் வெளியான பல்வேறு தகவல்களை தேடி பார்த்தார்.

    பின்னர் ஒரு செயலியில் வெளியான ஆயுர்வேத மசாஜ் குறித்த விவரங்களை பார்த்து தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அதில் இளம்பெண்களின் ஆபாச படங்களை காட்டி பல்வேறு விபரங்களை கேட்ட நபர், 8.25 லட்சம் ரூபாய் பெற்றார்.

    ஆனால் ஆயுர்வேத மசாஜ் தரவில்லை. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபரிடம் மோசடியில் ஈடுபட்டது, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சேரன் நகரை சேர்ந்த ஹரிபிரசாத்(31) மற்றும் அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மகேந்திரன், தேவம்பட்டி சக்திவேல்(26), ஈரோட்டை சேர்ந்த சரவணமூர்த்தி(23), திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(24), மற்றொரு சக்திவேல்(29), ஜெயபாரதி(22), மகேந்திரன்(30), கோகுல்(31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    அப்போது அந்த கும்பல் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    இந்த கும்பலுக்கு ஹரிபிரசாத் தலைவனாக இருந்துள்ளான். அவனது தலைமையில் தான் இவர்கள் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் விரைவில் பணம் குவிக்க வேண்டும் என்ற ஆசையும், சொகுசாக வாழவும் ஆசைப்பட்டுள்ளனர்.

    இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் லொக்கண்டா ஆப்பை பார்த்துள்ளனர்.

    அதில் கவர்ச்சி படங்கள் இருப்பதையும், அதனை பலர் பார்ப்பதையும் அறிந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து இதனை வைத்து நாம் பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.

    அதன்படி லொக்கண்டா அப்பில் வரும் தகவல்கள் மற்றும் விபரங்கள் கேட்பவர்களின் தகவல்களை சேகரித்து கொண்டனர்.

    பின்னர் சேகரித்த தகவல்களை வைத்து, அந்த நபரை செல்போனில் இவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

    அப்போது அந்த நபரிடம் மசாஜ், கால் கேர்ஸ், விபசாரம் என பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாகவும், குறிப்பிட்ட ஓட்டல், ரிசார்ட்டில் சர்வீஸ் செய்து தரப்படும்.

    உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல், ரிசார்ட் என தேவையான இடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    அங்கு குறிப்பிட்ட பெண்கள் வருவார்கள் என தகவல்கள் வெளியிடுவார்கள்.

    அழகான பெண்களின் ஆபாச போட்டோ அவர்களின் விவரங்களை குறிப்பிடுகிறார்கள்.

    மேலும் போட்டோக்களையும் அந்த நபர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனை பார்த்ததும் சபலம் ஏற்பட்டு அவர்களும், மோசடி கும்பல் தெரிவிக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.

    அங்கு சென்ற பின்னர் தான் அங்கு யாரும் இல்லை என்பதும், தன்னிடம் மோசடி நடந்ததும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

    ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி யாரும் புகார் அளிப்பதில்லை. இதனை இந்த கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    மேலும் இந்த மோசடி கும்பல் பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பகுதிகளில் தங்கி இருந்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதும், இதற்காக இவர்கள் புதிய சிம்கார்டுகள், வங்கி கணக்குகள் தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    குறிப்பிட்ட ஆப்பில், பல்வேறு தேவைகளுக்கு பெண்களை அனுப்புவதாக கூறி தகவல்களை வெளியிடுகிறார்கள். அத்துடன் அவர்களின் புகைப்படங்களையும் அனுப்புகிறார்கள். பெண்ணை பார்த்து அழகில் மயங்கும் வாலிபர்கள், அவர்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். பின்னர் ஓட்டல், ரிசார்ட்டுக்கு சென்று பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு இது மோசடி என்பது தெரியவருகிறது. பெண் ஆசையில் பணத்தை இழந்தவர்கள் அதை வெளியில் சொல்ல தயங்கி கண்ணீர் வடிக்கிறார்கள். அவமானம் கருதி புகார் தராமல் இருக்கிறார்கள். இதனை இவர்களை போன்ற கும்பல் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×