என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மரணம்
    X

    முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை

    காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மரணம்

    • 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் இன்று காலை காலமானார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வேல்துரை. இவர் 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் இன்று காலை காலமானார்.

    அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாகுளத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

    Next Story
    ×