search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி- 2 ஏஜெண்டுகள் அதிரடி கைது
    X

    ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி- 2 ஏஜெண்டுகள் அதிரடி கைது

    • இருவரும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 5 இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளனர்.

    சென்னை:

    ஐ.எப்.எஸ். என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி ஆசை காட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பண வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த குப்புராஜ், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய 2 பேரும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டதும், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் டி.எஸ்.பி. கபிலன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இவர்கள் இருவரும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 5 இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×