search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருக்கழுகுன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தை மேளா துவக்கம்- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    திருக்கழுகுன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தை மேளா துவக்கம்- விவசாயிகள் மகிழ்ச்சி

    • விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
    • திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.

    இந்நிலையில் மீண்டும் உழவர் சந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக 20 மகளிர் குழுவினரை ஒருங்கிணைத்து சந்தை வளாகத்தில் "உழவர் சந்தை மேளா" நடத்தப்பட்டது. திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்போர் பலர் கடை அமைத்து விற்பனை செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தையில் விவசாயிகள் கூடியதால் அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து காய்கறி, கீரைகள், மரச்செக்கு எண்ணெய், மாடிதோட்ட விதைகள், கிழங்குகள் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.

    திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிறியதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் நாகராஜன், பொறுப்பு அலுவலர்கள் பரஞ்ஜோதி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×