search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 30-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
    X

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 30-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

    • வருகிற 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா.
    • அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும் 60-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தலைமை கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, இசக்கி சுப்பையா, கீர்த்திகா முனியசாமி, முருகையா பாண்டியன், பாஸ்கரன், டாக்டர் மணிகண்டன், முனியசாமி, தச்சை கணேசராஜா, செந்தில்நாதன், கிருஷ்ண முரளி, ரவிச்சந்திரன், வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்துகொண்டு தேவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×