search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.65 லட்சத்தில் தங்க சேவல் கொடி- பக்தர் காணிக்கையாக வழங்கினார்
    X

    குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ரூ.65 லட்சத்தில் தங்க சேவல் கொடி- பக்தர் காணிக்கையாக வழங்கினார்

    • குன்றத்தூரில் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • பக்தர் தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    குன்றத்தூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்து வேண்டி உள்ளார். வேண்டுதல் நிறைவேறினால் தங்கத்தால் சேவல் கொடியை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தான் சொன்னபடி ரூ.65 லட்சத்தில் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட தங்கத்தாலான 3 அடி உயரம் கொண்ட தங்க சேவல் கொடியை முருக பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.

    இதனை குன்றத்தூர் முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொண்டார். அவருடன் முருகன் கோவில் அறங்காவலர்கள் குணசேகர், ஜெயக்குமார் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் கோவில் செயல் அலுவலர் கன்னியா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    தற்போது காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த தங்க சேவல் கொடியை தினமும் முருகபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×