என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
- இன்று காலை ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
- மதியம் காற்றாழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்மாவட்டங்கள் வழியாக கடக்கும்.
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Live Updates
- 9 Dec 2022 9:23 AM IST
மாண்டஸ் புயல் காரணமாக தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 9:19 AM IST
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 9:00 AM IST
சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 8:45 AM IST
மாண்டஸ் புயல் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில், கிருஷ்ணகிரியில் காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 9 Dec 2022 8:44 AM IST
சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.






