என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
    X

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    • இன்று காலை ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
    • மதியம் காற்றாழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்மாவட்டங்கள் வழியாக கடக்கும்.

    சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Live Updates

    • 9 Dec 2022 3:44 PM IST

      மாண்டஸ் புயல் எதிரொலியாக மரக்காணம் முதல் பழவேற்காடு வரை மாலை நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

    • 9 Dec 2022 3:35 PM IST

      மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • 9 Dec 2022 3:13 PM IST

      மாமல்லபுரத்துக்கு 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • 9 Dec 2022 2:52 PM IST

      மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • 9 Dec 2022 2:47 PM IST

      மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 9 Dec 2022 2:23 PM IST

      மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • 9 Dec 2022 1:43 PM IST

      மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியிலிருந்து சென்னை, காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    • 9 Dec 2022 1:39 PM IST

      செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 9 Dec 2022 1:23 PM IST

      கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல் வலுவிழக்கும் என்றும் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • 9 Dec 2022 1:21 PM IST

      மாண்டஸ் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×