search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
    X

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    • இன்று காலை ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
    • மதியம் காற்றாழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்மாவட்டங்கள் வழியாக கடக்கும்.

    சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Live Updates

    • 9 Dec 2022 3:53 PM GMT

      தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து 70 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் உள்ளது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலதத் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

    • 9 Dec 2022 3:24 PM GMT

      மாண்டஸ் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை‌ சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 9 Dec 2022 3:16 PM GMT

      மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 90 கிமீ தென்கிழக்கில் புயல் உள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரத்தில் கரை கடக்க உள்ளது.

    • 9 Dec 2022 3:08 PM GMT

      நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

    • 9 Dec 2022 3:08 PM GMT

      திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • 9 Dec 2022 2:56 PM GMT

      மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • 9 Dec 2022 2:45 PM GMT

      தற்போதைய நிலவரப்படி, மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 130 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் மாமல்லபுரத்தில் கரை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • 9 Dec 2022 2:42 PM GMT

      அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

    • 9 Dec 2022 2:13 PM GMT

      புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 9 Dec 2022 1:50 PM GMT

      சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

    Next Story
    ×