search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலத்தில் தற்கொலை செய்த கோவை தம்பதி உருக்கமான கடிதம்
    X

    சேலத்தில் தற்கொலை செய்த கோவை தம்பதி உருக்கமான கடிதம்

    • தற்கொலை செய்த மோகன்பாபு தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    • தற்கொலை செய்த மோகன்பாபு, ஜெயந்தி தம்பதியர் தற்கொலை செய்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    சேலம்:

    கோவை மாவட்டம், பீளமேடு கோபால் நகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்கள் கடந்த 11-ந் தேதி சேலம் வந்தனர்.

    சேலம் சினிமா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அறையில் இருந்து அவர்கள் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் நேற்று இரவு விடுதிக்கு சென்று, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹாலில் உள்ள மின்விசிறியில் ஜெயந்தி தூக்கில் சடலமாக கிடந்தார். மோகன்பாபு குளியலறையில் தூக்கில் தொங்கினார்.

    இதையடுத்து போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

    தற்கொலை செய்த மோகன்பாபு தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மோகன் பாபு ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டு வந்தார்.

    இதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால், கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, தம்பதியினர் இருவரும் மாயமாகி விட்டனர்.

    இதையறிந்த மோகன்பாபுவின் மகள்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். இது தொடர்பாக பிளேமேடு போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன். பேரில், பீளமேடு போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், தம்பதி இருவரும் சேலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    தற்கொலை செய்த மோகன்பாபு, ஜெயந்தி தம்பதியர் தற்கொலை செய்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கி 90 சதவீதம் கடனை கட்டி விட்டோம்.

    இருப்பினும் கடன் தொல்லையால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டோம். எங்களது சாவுக்கு நாங்களே காரணம்,' என எழுதி இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×