என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 201 ஏரிகள் நிரம்பியது
- பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
- திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது.
இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி உள்ளன.
மேலும் 194 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 57 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 27 ஏரிகள் 25 சதவீத்துக்கும் மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 56 மி.மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-44
பள்ளிப்பட்டு-24
ஆர்.கே.பேட்டை-42
சோழவரம்-33
பொன்னேரி-32
புழல்-25
பூந்தமல்லி-39
திருவாலங்காடு-33
திருத்தணி-45
பூண்டி-50
தாமரைப்பாக்கம்-35
திருவள்ளூர்-36
ஊத்துக்கோட்டை-50.