என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு
    X

    கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

    இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்.

    கோவையில் நேற்று தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர்.

    ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

    கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டு சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.

    இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×