search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: கடையநல்லூர் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை
    X

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் என்ஜினீயர் வீட்டையும், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையும் காணலாம்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: கடையநல்லூர் என்ஜினீயர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை

    • தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.

    கடையநல்லூர்:

    கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.

    அங்கு ரசாலிபுரம் தெருவை சேர்ந்த முகமது இத்ரிஸ்(வயது 25) என்பவரது வீட்டுக்குள் என்.ஐ.ஏ. குழு நுழைந்தது. என்ஜினீயரான இவர் சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 5.30 மணி முதல் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×