என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இனி பெருங்களத்தூரை ஈசியா கடக்கலாம்.. பயன்பாட்டுக்கு வந்த புது மேம்பாலம்
- சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய இந்த மேம்பாலம் சென்னை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-சென்னை, மேலும் சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் செங்கல்பட்டு - சென்னை மற்றும் சீனிவாசராகவன் தெருவுக்கு செல்லும் பாலம் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், சென்னை - செங்கல்பட்டு வழித்தட மேம்பாலத்தை டி.ஆர்.பாலு எம்பி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






