search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    X

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    • தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும்.
    • டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாகி உள்ளது. வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்ததால் தென்மாவட்ட மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள். பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. மழை தற்போது குறைந்து வெள்ள நீர் வடிந்து வந்தாலும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    இதற்கிடையில் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் இன்று கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும். ஓரிரு இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×