search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 50 திருநங்கைகளுக்கு ஆட்டோ, கார் ஓட்ட பயிற்சி
    X

    சென்னையில் 50 திருநங்கைகளுக்கு ஆட்டோ, கார் ஓட்ட பயிற்சி

    • சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
    • 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 50 திருநங்கைகளுக்கு கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    கவுரவமான தொழிலில் ஈடுபடும் வகையில், 50 திருநங்கைகளுக்கு சகோதரன் அமைப்பு, அரிமா சங்கம் இணைந்து கார், ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை, புறநகர்பகுதிகளில், 2 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில், மிகக்குறைந்த அளவினர் மட்டுமே, சுயதொழில் செய்கின்றனர். பெரும்பாலானோர் ரெயில்களிலும், கடைகளிலும் காசு பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருநங்கையர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, சகோதரன் அமைப்பு சார்பில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சென்னை நகரில் வசிக்கும், 50 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கார், ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அரிமா சங்க உதவியுடன் 50 திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சகோதரன் அமைப்பு தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வாகனம் தொகுதி தி.மு.க., எம். எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    முதல் கட்டமாக, 10 திருநங்கைகள் ஓட்டுனர் பயிற்சிக்கு தேர்வு செய்து அவர்களுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சியகத்தில் நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி முடித்தவர்கள் ஆட்டோ, கார் ஓட்டுனராக வலம் வர உள்ளனர். எதிர்காலத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சொந்த வாகனம் வாங்க அமைப்பின் வாயிலாக ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×