search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய இடம் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சியா? பொதுமக்கள் குற்றச்சாட்டு
    X

    ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய இடம் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சியா? பொதுமக்கள் குற்றச்சாட்டு

    • கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 116 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள காலிஇடத்தில் பஸ்நிலையம் அமைக்க 1.54 ஏக்கர் நிலம், நூலத்துக்காக 3625 சதுர அடி நிலம், ஆஸ்பத்திரி கட்ட 4368 சதுர அடி நிலம், தபால் நிலையம் அமைக்க 3675 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் முதல்கட்டமாக 6920 சதுர மீட்டர் இடத்தில் 43 மனைகளும் 2 கடைகளும் உருவாக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு டெண்டர் கோரி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு வீட்டு வசதி நிர்வாகம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விற்பனை செய்ய முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு திடலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட்டுவசதி வாரிய இடத்தினை விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சென்று உள்ளது. பஸ்நிலையம், நூலகம், தபால் நிலையம், ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை இதுவரை அந்தந்த துறையிடம் ஒப்படைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    Next Story
    ×