என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

ஓஎம்ஆரில் அனைத்து வசதிகளுடன் பிளாட் வாங்க வேண்டுமா? - ஆதித்யராம் குழுமம் வழங்கும் அரிய வாய்ப்பு

- தென் இந்தியாவில் கடந்த 10 ஆண்டாக ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக ஆதித்யராம் குழுமம் செயல்பட்டு வருகிறது.
- இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பிளாட் வாங்கி பயனடையும்படி ஆதித்யராம் நிறுவனம் உங்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீபாவளி என்பது ஒளி, நம்பிக்கை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பண்டிகையாகும். தீபாவளி சமயத்தில் நமது பணத்தை உருப்படியான விஷயங்களில் முதலீடு செய்யவேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
அந்த வகையில், இந்த தீபாவளி அன்று உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆதித்யராம் குழுமம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
தென் இந்தியாவில் கடந்த 10 ஆண்டாக ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக ஆதித்யராம் குழுமம் செயல்பட்டு வருகிறது.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த நிறுவனம் சென்னை திருப்போரூரில் Adityaram Happiest Residential Villa Plots என்ற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய பிளாட்டுகளை விற்பனை செய்ய தயாராக உள்ளது.
சென்னை மக்களுக்கு சிக்கலாக இருக்கும் அதிகப்படியான வீட்டு வாடகை, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளில் உள்ள பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் விதமாக அமைந்துள்ளது.
பல்வேறு அளவுகளில் உள்ள இந்த மனைப்பிரிவு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் முதலீட்டு அடிப்படை ஆகிய நிலைகளில் நீண்ட கால ஆதாயம் தரும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு 600 சதுர அடி முதல் 3,600 சதுர அடி என மொத்தம் 5 வகையான பிளாட்டுகள் உள்ளன. மேலும், 900 முதல் 3,600 சதுர அடி அளவிலான 165 பிரிமீயம் வில்லா பிளாட்டுகள் உள்ளன.
சிறந்த சாலை வசதி, சோலார் எல்இடி தெரு விளக்குகள், 24 மணிநேர கண்காணிப்பு கேமரா வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை உள்ளன.
தண்ணீருக்கான போர்வெல் வசதி உள்ளது. மேலும் 3 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு பணி செய்து வழங்கப்படும்.
மனைப்பிரிவைச் சுற்றிலும் பொழுதுபோக்கு வளாகங்கள், சுற்றுலா பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மையங்கள், ஐடி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன.
இந்த வீட்டுமனை விற்பனை திட்டம் அரசின் டி.டி.சி.பி மற்றும் ரெரா ஆகிய அங்கீகாரங்களைப் பெற்றதாகும். மனை வாங்குபவர்களுக்கு 80 சதவீதம் வங்கிக் கடன் பெறவும் வசதி செய்து தரப்படுகிறது. முன்னணி வங்கிகளின் அனுமதி பெற்ற சொத்தாக இது உள்ளது. 100 சதவீதம் வரை சட்ட உதவி வழங்கப்படும்.
திருப்போரூர் பஸ் டெர்மினசுக்கு 2 நிமிடத்திலும், கிளாம்பாக்கம் பஸ் டெர்மினசுக்கு 5 நிமிடத்திலும், திருப்போரூர் முருகன் கோவிலுக்கு 2 நிமிடத்திலும், ஓஎம்ஆர் பைபாஸ் ரோட்டுக்கு 2 நிமிடத்திலும் செல்ல முடியும்.
பிளாட் முன்பதிவின் போது 10 சதவீத தொகையும், அடுத்த 15 நாட்களில் 40 சதவீத தொகையும், அடுத்த 30 நாளில் மீதமுள்ள 50 சதவீத தொகையும் வழங்க வேண்டும் என ஆதித்யராம் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை பெற 96777 66688 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஆதித்யராம் பிராபர்ட்டிஸ் கார்ப்பரேட் அலுவலகம், No.50, SH 49, Adityaram Nagar, Panaiyur, Chennai, TamilNadu - 6000 119 என்ற முகவரிக்குச் சென்று முழு விபரங்களை அறிந்துகொள்ளலாம். www.adityaramproperties.com என்ற இணைய தளம் மூலமும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளாட் பார்க்க செல்லும் நேரத்தை https://www.adityaramproperties.com/adityaram-happinest-oi/ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பிளாட் வாங்கி பயனடையும்படி ஆதித்யராம் நிறுவனம் உங்களைக் கேட்டுக் கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
