search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகர் பிரகாஷ் ராஜின் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை- வருவாய்த்துறை
    X

    நடிகர் பிரகாஷ் ராஜின் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை- வருவாய்த்துறை

    • இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை.

    கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி வீடு கட்டி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பேத்துப்பாறை பகுதியில் வீடு கட்டி வரும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

    கொடைக்கானல் பகுதியில் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது ஏன்? சுமார் 25 நாட்களுக்கு மேலாக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

    இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தெரிவிக்கையில், "குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோரது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என தாசில்தாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்கள் அளவீடு செய்யப்படும். இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    இது குறித்து வில்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. எனவே விதி மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்தும், கனரக வாகனங்கள் பயன்படுத்தியது குறித்தும் அவர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா நிலத்தில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாரம்பரிய பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தவும் தடையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×