search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீஸ்காரரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய போதை கும்பல்
    X

    போலீஸ்காரரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய போதை கும்பல்

    • பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரேந்திரன்(48). போலீஸ்காரரான இவர் திருமுல்லை வாயல் போலீஸ் நிலையத்தில் தனிப்படைபிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில நேற்று இரவு அவர் திருமுல்லை வாயல் ஏரிக்கரை அருகே சென்றார். அப்போது அங்கு 8 பேர் கும்பல் மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை நரேந்திரன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் போதை கும்பலுக்கும் போலீஸ்காரர் நரேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அவர் போலீஸ்காரர் என்று தெரியாமல் போதை கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அருகில் கிடந்த இரும்பு கம்பியாலும் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நரேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கே மயங்கி விழுந்தார்.

    உடனே போதை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே வந்தவர்கள் நரேந்திரன் படுகாயத்துடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். தற்போது அதே போல் மீண்டும் சம்பவம் நடந்து உள்ளது.

    இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காவலரை தாக்கிய 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×