search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 85.50 லட்சம் பேர் பயணம்
    X

    கடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 85.50 லட்சம் பேர் பயணம்

    • 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.

    நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 85,50,030 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×