search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதிப்பதற்கு வயது தடையில்லை- அண்ணா பல்கலை.யில் பி.எச்.டி. பட்டம் பெற்ற 70 வயது முதியவர்
    X

    அண்ணா பல்கலைக்கழகம்

    சாதிப்பதற்கு வயது தடையில்லை- அண்ணா பல்கலை.யில் பி.எச்.டி. பட்டம் பெற்ற 70 வயது முதியவர்

    • பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றார்.
    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

    சென்னை:

    சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978-ம் ஆண்டு ஆர்.ராஜகோபால் என்பவர் வேதியியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றார். அதன் பிறகு 1980-ம் ஆண்டு எம்.டெக். பட்டம் பெற்றார்.

    இதன் பிறகு அவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பல்வேறு ஊர்களில் பணியாற்றிய ராஜகோபால் 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் சென்னை திரும்பினார்.

    அவர் பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றார். அப்போது அவரது முயற்சியை கண்டறிந்த ஓ.என்.ஜி.சி. பொது மேலளார் அவரை ஊக்கப்படுத்தி பி.எச்.டி. படிக்குமாறு அவ்வப்போது ஊக்கம் அளித்து வந்தார்.

    இந்த சூழலில் ஓய்வுக்கு பிறகு சென்னை திரும்பிய அவர் தொழில் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த தனது மகளை பல்கலைக்கழகத்தில் விடுவதற்காக வந்து செல்வார். அப்போது பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை தொடர அவருக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்புக்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.

    70 வயது ஆன நிலையிலும் படிப்பு மீதுள்ள ஆர்வம் காரணமாக ஆராய்ச்சி படிப்பை முடித்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ராஜகோபால் கூறுகையில், "ஓ.என்.ஜி.சி.யில் உருவாகும் கழிவுநீர் பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். இது ஒரு ஆரம்ப ஆய்வுதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×