search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும்- பாரிவேந்தர் எம்.பி.
    X

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை உருவாக்க வேண்டும்- பாரிவேந்தர் எம்.பி.

    • கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாரிவேந்தர் எம்.பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    • எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஐ.ஜே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் நிற்க விருப்பம்.

    சென்னை:

    இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர்.பாரிவேந்தரின் 84-வது பிறந்தநாள் விழா காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

    கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாரிவேந்தர் எம்.பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்னர் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது:-

    பணம் கொடுத்து அழைப்பது அல்ல கூட்டம் தானாக விரும்பி வரவேண்டும். எனக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கு நூறு விருப்பம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஐ.ஜே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் நிற்க விருப்பம்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏக்களை உருவாக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதிக்கு 6 சட்டப்பேர வை தொகுதி என்பதால் ஐ.ஜே.க.வினரை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து , பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன், பொருளாளரும் மூத்த வழக்க றிஞருமான ஜி.ராஜன், கட்சியின் முன்னாள் தலைவர் கோவைத்தம்பி, முதன்மை அமைப்புச் செயலாளரும்,பா.மு.ச. தலைவருமான எஸ்.எஸ்.வெங்கடேசன், இணை பொதுச்செ யலாளர்லிமா ரோஸ் மார்ட்டின், தலைமை நிலையச்செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், துணைத்தலைவர் ஆனந்தமு ருகன், துணை பொதுச்செயலாளர்கள் நெல்லை ஜீவா, உதயசூரியன், எம்.ரவிபாபு, மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், விளம்பரப்பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் லதா மற்றும் பார்க்கவகுல முன்னேற்றசங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×