search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது நாள் திருச்செந்தூரில் இன்று மாலை அண்ணாமலை நடைபயணம்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் 4-வது நாள் திருச்செந்தூரில் இன்று மாலை அண்ணாமலை நடைபயணம்

    • 12-ந் தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் யாத்திரை சென்ற அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நடைபயணம் மேற்கொண்டார்.
    • இன்று காலை விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் கடந்த 11-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தனது பாத யாத்திரையை தொடங்கினார். 12-ந் தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் யாத்திரை சென்ற அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    மாலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார் திருநகரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி சித்திரை வீதி வழியாக ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு முடிவடைந்தது.

    இந்நிலையில் இன்று மாலை திருச்செந்தூரில் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். இதற்காக நேற்று இரவு திருச்செந்தூர் வந்த அவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினார். இன்று காலை விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    மாலை 4 மணிக்கு வீரபாண்டிய பட்டினத்தில் நடைபயணத்தை தொடங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரும்பு ஆர்ச், முதல் சந்திதெரு, சிவன் கோவில் வாசல், சன்னதி தெரு முகப்பு வழியாக புளியடி மாரியம்மன் கோவில், சபாபதிபுரம் சந்திப்பு, பால்பண்ணை தெரு சந்திப்பு, கிருஷ்ணன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவில் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் சந்திப்பில் நடைபயணத்தை முடிக்கிறார்.

    Next Story
    ×