search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் போலீஸ் அதிரடி வேட்டையில் குட்கா வியாபாரிகள் 42 பேர் கைது
    X

    சென்னையில் போலீஸ் அதிரடி வேட்டையில் குட்கா வியாபாரிகள் 42 பேர் கைது

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய அனைத்து போலீஸ் கமிஷனர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • தனிப்படை போலீசார் தினமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சென்னையில் சிறப்பு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய அனைத்து போலீஸ் கமிஷனர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தினமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான ஒரு வாரக்கால கண்காணிப்பில் குட்கா கடத்தியது மற்றும் பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 105.3 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்துதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    எனவே கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×