search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் கோட்டத்தில் ரெயில்களில் ஓசியில் பயணம் செய்த 419 பேர் சிக்கினர்- ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூல்
    X

    சேலம் கோட்டத்தில் ரெயில்களில் ஓசியில் பயணம் செய்த 419 பேர் சிக்கினர்- ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூல்

    • சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.
    • ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    சேலம்:

    ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.

    அப்போது டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள் , அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 419 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயிலில் பயண சீட்டு இன்று பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம், அவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதுடன் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×