search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் வந்து இறங்கிய இலங்கை அகதிகள்.
    X
    ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதியில் வந்து இறங்கிய இலங்கை அகதிகள்.

    ராமேசுவரத்துக்கு இலங்கை அகதிகள் 3 பேர் வருகை

    இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்து மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்ததாக இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.
    ராமேசுவரம்;

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் பகுதியில் இன்று 3 அகதிகள் இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கொழும்பு, தெமட்டோ கோட்டை பகுதியை சேர்ந்த வரதன் மனைவி ஜெசிந்தா மேரி (வயது 51), வரதன் மகன் பிரிவின் சஞ்சய் (10), லோகநாதன் மகன் அனிஸ்டன் (31) என தெரியவந்தது.

    அவர்கள் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து எங்களால் கூலி வேலை செல்ல முடியாமல் உணவுக்கு தவித்து வந்ததாகவும், இதனால் இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று மாலை மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் 3 அகதிகளும் 1995-ம் ஆண்டு முதல் 2017 வரை குடியாத்தம் அகதிகள் முகாமில் இருந்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    Next Story
    ×